TamilsGuide

கனடா கியூபெக்கில் மதுபோதையில் வாகனம் செலுத்திய பலருக்கு நேர்ந்த கதி

கனடாவின் கியூபெக்கில் மது போதையில் வாகனம் செலுத்திய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 46 பேர் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குளிர்காலத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய வாகன டயர்களை பொருத்தாத மேலும் 150 சாரதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கியூபெக் போலீசார் ஒரே நாளில் வீதிகளில் சுமார் 300 சாரதிகளை சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பண்டிகை காலத்தில் கூடுதல் விசாரணைகள் சோதனைகள் நடத்தப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

மது போதையில் வாகனம் செலுத்துவது ஆபத்தானது எனவும் விபத்துக்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Leave a comment

Comment