TamilsGuide

அமெரிக்க விமானத்தின் மீதே துப்பாக்கிச்சூடு நடத்திய அமெரிக்க கடற்படை

புளோரிடா மாகாணத்தில் செங்கடலின் மேல் பறந்த அந்நாட்டின் விமானம் மீதே அமெரிக்காவின் கடற்படை துப்பாக்கிச்சூடு நடாத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புளோரிடாவில் உள்ள செங்கடலின் மேலே எப்/ஏ-18 ரக போர் விமானம் ஒன்று இன்று பறந்து சென்றபோது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. 

இந்த சம்பவத்தில் 2 விமானிகளில் ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் விமானத்தில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினர். 

இது தொடர்பில் அமெரிக்க ராணுவத்தின் மத்திய படை வெளியிட்ட செய்தி குறிப்பில், 

அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஹாரி எஸ். ட்ரூமேன் என்ற விமானந்தாங்கி கப்பலில் இருந்து இந்த விமானம் பறந்து சென்றுள்ளது. 

இருப்பினும், இதுபற்றி அறியாமல், இந்த கப்பல் குழுவுடன் இணைந்த மற்றொரு கப்பலான யு.எஸ்.எஸ். கெட்டிஸ்பர்க் கப்பலில் இருந்தவர்கள் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.

மேலும், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் சூழலில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் வர்த்தக கப்பல்களை தாக்கி வருகின்றனர்.

இதனை எதிர்கொள்ளும் வகையில், அந்த பகுதியில் அமெரிக்க கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment