TamilsGuide

இன்று வரை நீங்கள் எனக்கு அளித்த அன்பு, மற்றும் ஆதரவுக்கு நன்றி - அஜித்துக்கு நன்றி தெரிவித்த மகிழ் திருமேனி

நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.

அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜூன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார்.

படத்தின் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரங்களின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். கடந்த மாதம் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படத்தின் டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலானது.

சமீபத்தில் அஜித் மற்றும் திரிஷா இணைந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது. இந்நிலையில் படத்தின் இயக்குனரான மகிழ் திருமேனி படப்பிடிப்பின் இறுதி நாளான இன்று அவரது நன்றியை வெளிப்படித்தி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இப்பதிவை படக்குழு அதிகாரப்பூரவமாக வெளியிட்டுள்ளது.

அதில் " சார், உங்களுக்கு எல்லையற்ற அன்பும் நன்றியும். நீங்கள் நீங்களாக இருப்பதன் மூலம் எங்கள் அனைவருக்கும் நீங்கள் வழிகாட்டி,ஊக்கம் அளித்துள்ளீர்கள். விடாமுயற்சி உண்மையில் விடாமுயற்சியின் வெற்றியாகும், முழு குழுவும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளது, சார்.

முதல் நாள் முதல் இன்று வரை நீங்கள் எனக்கு அளித்த அன்பு, அக்கறை மற்றும் ஆதரவுக்கு நன்றி சார். மிகுந்த அன்பும் மரியாதையும்! மகிழ் திருமேனி. என கூறியுள்ளார்.

Leave a comment

Comment