TamilsGuide

வைத்தியர்களின் ஓய்வு வயது தொடர்பான வர்த்தமானி வெளியீடு


அனைத்து வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயதை 63 ஆக நீட்டிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஓய்வூதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின்படி, 2022 டிசம்பர் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலின்படி, விசேட வைத்தியர்கள், தர வைத்திய அலுவலர்கள், பல் மருத்துவ அலுவர்கள், மருத்துவ நிர்வாக தரத்திலுள்ள அனைத்து அலுவலர்கள், பல் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வைத்திய தொழிலாளர்கள் என்போரின் கட்டாய ஓய்வு பெறும் வயது 63 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஏற்பாடுகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட வைத்திய அதிகாரிகளின் ஓய்வு வயதை 63 வயது வரை நீட்டிக்க கடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்தது.

சுகாதார, ஊடகத்துறை அமைச்சர் மற்றும் பொதுநிர்வாக, மாகாண மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இந்த அனுமதி வழங்கப்பட்டது.

முன்னதாக, வைத்தியர்களின் ஓய்வு வயது 65 ஆக இருந்தது, பின்னர் அது 60 ஆக குறைக்கப்பட்டமையும் விசேட அம்சமாகும்.
 

Leave a comment

Comment