கனடாவின் டர்ஹம் பகுதியில் சுமார் 29000 கஞ்சா செடிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
டர்ஹம் பகுதியின் கெனிங்டன் பிராந்தியத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னர் இந்த கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளன.
அண்மையில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பொது கஞ்சா செடிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கஞ்சா செடிகளுடன் உலர்த்தப்பட்ட ஒரு தொகுதி கஞ்சா செடிகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் டர்ஹம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


