TamilsGuide

NEEK படத்தின் 3-வது சிங்கிள் அப்டேட் கொடுத்த தனுஷ்

ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியானது. இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார்.

பாடல் ரிலீஸ் ஆனதில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது இப்பாடல் யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை அள்ளியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் 'Yedi' பாடல் வரும் 20ம் தேதி வெளியாகும் என போஸ்டர் பகிர்ந்து படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். 
 

Leave a comment

Comment