TamilsGuide

தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது பெரிய மாறுதல்-நடிகர் கஜராஜ்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தந்தையும், நடிகருமான கஜராஜ் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ் சினிமா இன்று நல்ல நிலைமையில் உள்ளது. படித்தவர்கள் அதிகம் வருகிறார்கள். முன்பை விட இப்போது தமிழ் சினிமா அதிக வளர்ச்சி அடைந்துள்ளது.

சிறிய பட்ஜெட்டில் அதிகளவில் படங்கள் வெளியாகிறது. திறமையானவர்கள் சினிமாவிற்கு வருகிறார்கள். இதை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்.

நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் இன்று கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது பெரிய மாறுதலாக கருதுகிறேன்.

முன்பு கதாநாயகர்களின் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று நல்ல கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனக்கான வாய்ப்பு என் மகன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மூலம் வந்தது.

எனது தாய், தந்தை புண்ணியத்தில் 100 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். என் மகனை பற்றி நான் சொல்வதை காட்டிலும் மக்கள் அதிகம் பேசுகிறார்கள். இதுவே எனக்கு பெருமையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


 

Leave a comment

Comment