TamilsGuide

பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர்

கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி சிதம்பரம் இயக்கத்தில் வெளியானது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம். இத்திரைப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. உலகளவில் இப்படம் மக்களிடம் அங்கீகாரத்தை பெற்றது. இப்படத்தில் சௌபின் சாஹிர், ஸ்ரீனாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி மற்றும் பலர் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு தமிழ் நாட்டு மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படம் இதுவரை 242 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் இத்திரைப்படம் இடம் பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து சிதம்பரம் விக்ரமுடன் திரைப்படம் இயக்க போவதாகவும் இந்தி மொழியில் திரைப்படம் இயக்க போவதாக செய்திகள் பரவி வந்தன. ஆனால் அதை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.

இந்நிலையில் இயக்குனர் சிதம்பரம் நடிகர் அனில் கபூரை வைத்து ஒரு விளம்பர படத்தை இயக்கி வருகிறார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது.
 

Leave a comment

Comment