TamilsGuide

11 நாட்களில் 1409 கோடி வசூல் சாதனை படைத்த புஷ்பா 2.. 

இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.

'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், இதுவரை இந்தியன் சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகம் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் புஷ்பா திரைப்படம் வெளியான 11 நாட்களில் 1409 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் இந்திய சினிமாவில் அதிவேகமாக 1000 கோடி வசூலை கடந்த முதல் திரைப்படம் என்ற சாதனையை புஷ்பா 2 படைத்துள்ளது. இத்திரைப்படம் விரைவில் 2000 கோடி ரூபாய் வசூல் பெற்று சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு பாகுபலி 2 திரைப்படம் 10 நாட்களில் 1000 கோடி வசூலை கடந்ததே சாதனையாக இருந்தது. இதுவரை இந்திய சினிமாவில் டங்கல், பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எப். 2, கல்கி 2898 ஏ.டி., ஜவான், பதான் ஆகிய திரைப்படங்கள் தான் 1000 கோடி வசூலை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புஷ்பா, புஷ்பா 2, புஷ்பா 2 தி ரூல், சினிமா, சினிமா செய்தி, தமிழ் சினிமா, அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா,Pushpa, Pushpa 2, Pushpa 2 The Rule, Cinema, Cinema News, Tamil Cinema, Allu Arjun, Rashmika Mandanna, 
 

Leave a comment

Comment