TamilsGuide

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த மழையில் நனைகிறேன் படக்குழு

பிரபல மலையாள நடிகர் அன்சன் பால். இவர் தமிழில் ரெமோ, சோலோ, 90 எம்எல், தம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'மழையில் நனைகிறேன்'. இப்படம் அன்சன் பால் நடிப்பில் உருவாகியுள்ள 5-வது தமிழ் திரைப்படமாகும்.

இந்தப் படத்தை ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் மற்றும் ஸ்ரீவித்யா ராஜேஷ் தயாரித்து இருக்கிறார்கள். டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசை அமைத்துள்ளார்.

அன்சன் பால் முதன்முதலாக கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரெபோ மோனிகா ஜான் கதாநாயகியாக நடித்துள்ளார்.

காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த ஜூலையில் வெளியானது.

படத்தின் பாடலான நாட்கள் அழகாய் மாறி போகுதே வீடியோ பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது. திரைப்படம் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது ஆனால் சூழ்நிலை காரணமாக இப்படம்ம் அன்று வெளியாகவில்லை. திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு தற்பொழுது அறிவித்துள்ளது.

திரைப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
 

Leave a comment

Comment