• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொள்ளுப்பிட்டியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

இலங்கை

கொழும்பு, கொள்ளுப்பட்டியில் அமைந்துள்ள DSI கட்டிடத்தில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் தாழ்வாரத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் 65 முதல் 70 வயதுக்கு இடைப்பட்டவராகவும், 05 அடி 08 அங்குல உயரம் கொண்டவராகவும் இருக்கலாம் என கருதப்படுகிறது.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply