TamilsGuide

36 மணித்தியாலங்களுக்கு பலத்த மழை – மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் கிழக்கு மாகாணம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, பதுளை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு அபாய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment