TamilsGuide

யாழில் தீவிரமடைந்து வரும் எலிக்காய்ச்சல்

யாழில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்த அவர் யாழ் மாவட்டத்தில் இதுவரை 63 பேர்  எலிக்காய்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  இதுவரை எலிக் காய்ச்சலினால் யாழ். மாவட்டத்தில் 06 இறப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment