புஸ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து நடிகர் அல்லு அர்ஜூன் மீது போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவருக்கு தெலுங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இதனையடுத்து அவர் இன்று காலை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு ஹூப்ளியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றடைந்தார்.
இந்நிலையில் அல்லு அர்ஜூன் கைது குறித்து அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியிடம் தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது
செய்தியாளர்: இப்போது மிகப்பெரிய தெலுங்கு நட்சத்திரத்தை கைது செய்துள்ளீர்கள். மக்கள் பெரும் கோபத்தில் இருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் அதைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்ன இது நம்ம அரசியல் சூப்பர் ஸ்டார் நமது பிலிம்ஸ் சூப்பர் ஸ்டாரை கைது செய்து விட்டார் என மக்கள் கூறி வருகின்றனர்.
ரேவந்த் ரெட்டி: இல்லை நீங்கள் தவறாக பேசுகிறீர்கள். யாரும் அப்படி பேசிக்கொள்ளவில்லை.
செய்தியாளர்: சார் அங்கங்கே போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
ரேவந்த் ரெட்டி: போராட்டங்கள் எல்லா இடங்களிலும் எதற்காவது நடந்து கொண்டிருக்கும். ஓரிடத்தில் 10 முதல் 20 பேர் இருந்தால் அதற்கு பெயர் போராட்டம் அல்ல. மேலும் அவர்கள் அனுமதி வாங்காமல் போராட்டம் செய்தால் அவர்களும் ஜெயிலுக்கு செல்ல வேண்டி இருக்கும்.
செய்தியாளர்: நீங்கள் ஆபத்தான மனநிலையில் இருக்கிறீர்கள்.
ரேவந்த் ரெட்டி: ஒருவரை ஜெயிலுக்கு கொண்டு சென்றதற்கு எப்படி எல்லாம் பேசுகிறீர்கள். ஆனால் ஒரு பெண் தன் உயிரை இழந்து இருக்கிறார். அவரைக் குறித்து நீங்கள் ஒரு துளியும் கவலைப்படவில்லை. ஆனால் நீங்கள் அந்தப் பெண்ணின் குடும்பம் எப்படி இருக்கிறது. அந்த ஏழை பெண்ணின் வாழ்க்கை என்ன ஆனது என்று எதுவும் கேட்கவில்லை.
அந்த பெண்ணின் ஒரு குழந்தை 11 நாட்களாக கோமாவில் இருக்கிறான். அவன் மீண்டு வந்து அம்மா எங்கே என்று கேட்டால் அம்மா இல்லை. அவன் வாழ்க்கை எப்படிச் செல்லும் இது குறித்தெல்லாம் நீங்கள் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை.
சினிமாவில் நடிப்பது அவர் வேலை. பைசா குறைவாக வரப்போகிறது அல்லது அதிகமாக வரப்போகிறது. இதில் உங்களுக்கும் எனக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் இருக்கிறது. சொல்லுங்க பாப்போம். ஒருவர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்கிறார். ஏதாவது ஒரு நிலத்தை வாங்குவார். லே அவுட் போடுவார் விற்பார். சம்பாதிப்பார்.
இந்த நாட்டிற்காக இந்தியா- பாகிஸ்தான் பார்டரில் போய் நின்று சண்டை போட்டு வெற்றி பெற்றாரா. படம் எடுக்கிறார் பணம் சம்பாதிக்கிறார்.
இவ்வாறு ரேவந்த் ரெட்டி கூறினார்.


