TamilsGuide

அனுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் லொறி மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

அனுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் தம்புத்தேகம பெல்லன்கடவல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

தம்புத்தேகமவில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த சிறிய ரக லொறியொன்றும் அனுராதபுரத்திலிருந்து தம்புத்தேகம நோக்கி பயணித்த லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

சிறிய லொறியில் பயணித்த ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் ஏனைய நால்வரும் தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

Leave a comment

Comment