TamilsGuide

கனடாவிலிருந்து கார் ஒன்றைக் திருடிக்கொண்டு அமெரிக்காவுக்குள் நுழைந்த நபர்

கனடாவிலிருந்து கார் ஒன்றைத் திருடிய ஒருவர், அமெரிக்காவுக்குள் மின்னல் வேகத்தில் பாய்ந்துள்ளார்.

அவரது கார் மோதுவதிலிருந்து மயிரிழையில் தப்பியுள்ளார் அமெரிக்க பொலிசார் ஒருவர்.

நேற்று மதியம் 1.30 மணியளவில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிருந்து கார் ஒன்றை கத்தி ஒன்றின் உதவியுடன் திருடிய ஒருவர், எல்லை கடக்கும் பகுதியான Peace Arch என்னுமிடம் வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளார்.

அமெரிக்க பொலிசார் அவரைத் தடுத்து நிறுத்த முயன்றபோது, அவரது கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது.

அப்போது அந்த நபருடைய கார் தன்மீது வேகமாக மோதுவதிலிருந்து மயிரிழையில் தப்பியுள்ளார் பொலிசார் ஒருவர்.

அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் அந்தக் காரை துரத்திச் செல்ல, வாஷிங்டனிலுள்ள Skagit என்னுமிடத்தில் அவரது காரை சுற்றி வளைத்துள்ளார்கள்.

அந்தக் காரை சோதனை செய்தபோது, காருக்குள் ஒரு பட்டாக்கத்தி இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

காரைத் திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  
 

Leave a comment

Comment