TamilsGuide

வவுனியாவில் சிறப்பான முறையில் மத்தியஸ்த தினம் அனுஸ்டிப்பு

வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நீதி அமைச்சின் மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் விமல்ராஜ் தலைமையில் இன்று மத்தியஸ்த தின நிகழ்வுகள் சிறப்பான முறையில் இடம்பெற்றன.

இந்நிகழ்வில், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ந.கமலதாசன், உதவி மாவட்ட செயலாளர் எம்.சபர்ஜா, விசேட காணி மத்தியஸ்த சபை மற்றும் ஏனைய மத்திய சபைகளின தவிசாளர்கள், மத்தியஸ்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 

Leave a comment

Comment