• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்

இலங்கை

வவுனியா மாவட்ட பெண்கள் சிவில் சமூக வலையமைப்பும், பொஸ்டோ நிறுவனமும் இணைந்து பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலமொன்றை இன்று முன்னெடுத்திருந்தது.

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் ஆரம்பித்த குறித்த பேரணியானது பசார் வீதியூடாக, வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியை அடைந்து பிரதான வீதி ஊடாக சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தை அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தல் விசேட   நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வவுனியா பொது வைத்தியசாலை உளநல பிரிவு வைத்தியர் சுதாகரன், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பி.எம்.குமார, வவுனியா பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ராகினி, சட்டத்தரணி விதுசினி மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெண்கள் அமைப்புக்களின அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 

Leave a Reply