TamilsGuide

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுப்பினர்களை நியமித்துள்ளார்.

ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கி வைத்தார்.

இதன்படி கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

டாமியன் அமல் கப்ரால், மொஹான் ரே அபேவர்தன, சஞ்சய் குலதுங்க மற்றும் கலாநிதி ஹர்ஷ சுபசிங்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
 

Leave a comment

Comment