TamilsGuide

SJB இன் தேசிய பட்டியல் நியமனம் தொடர்பான வர்த்தமானி வெளியீடு

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேசிய பட்டியல் ஆசனங்களுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலின் ஊடாக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக பின்வரும் நான்கு பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மனோ கணேசன் – தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA)

நிசாம் காரியப்பர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC)

சுஜீவ சேனசிங்க – ஐக்கிய மக்கள் சக்தி (SJB)

அச்சு மொஹமத் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC).
 

Leave a comment

Comment