TamilsGuide

Chiyaan 63 - மாவீரன் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம் வெளியான அதிரடி அப்டேட்

'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மடோன் அஸ்வின் அடுத்ததாக நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் படத்தை இயக்கவுள்ளார். இப்படம் சீயான் விக்ரமின் 63- வது திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படத்தை மாவீரன் திரைப்படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இது எம்மாதிரியான கதைக்களத்தில் இருக்க போகிறது. மாவீரன் திரைப்படத்தை போல் இப்படமும் ஒரு மாறுப்பட்ட கதைக்களத்தில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சீயான் விக்ரம் தங்கலான் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது எஸ்.யூ அருண்குமார் இயக்கி இருக்கும் வீர தீர சூரன் திரைப்படத்தின் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது.
 

Leave a comment

Comment