TamilsGuide

பங்குச் சந்தையில் பாரிய அலை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வரலாற்றில் முதல் தடவையாக 14,000 புள்ளிகளைக் கடந்து புதிய உச்சநிலையை இன்று (12) பதிவு செய்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண்களும் 150.72 புள்ளிகள் (1.09%) அதிகரித்து 14,035.81 புள்ளிகளில் முடிவடைந்தது.

இது ஒரு புதிய வரலாறு காணாத உச்சமாகும்.

இதற்கிடையில், S&P SL20 43.17 (1.04%) அதிகரித்து 4,186.46 புள்ளிகளில் நிறைவடைந்தது.

இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 7,35 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
 

Leave a comment

Comment