TamilsGuide

எலிக்காய்சல் தொடர்பில் கொழும்பில் இருந்து வந்த நிபுணர் குழு

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக மர்ம காய்ச்சல் காரணமாக அதிகளவிலான நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது.

இதேவேளை இவர்களுக்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவிவருகின்றது.

இந்நிலையில் கொழும்பு தொற்று நோய்யியல் பிரிவை சேர்ந்த வைத்தியர் பிரபா அபயக்கோன் உள்ளிட்ட குழுவினர் இன்று யாப்பாணத்துக்கு விஜயம் செய்து ஆய்வு நடவடிக்ககைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

இன்று யாழ் போதான வைத்தியசாலைக்கு விஜயம் செய்த குழுவினர் அங்கு ஆய்வு நடவடிக்கைளில் ஈடுபட்டதுடன் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி,பொது வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தனர்
 

Leave a comment

Comment