TamilsGuide

கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்-அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பிணை

கடந்த 2ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 04 பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இவர்கள் ணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தின் போது, ​​மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்ததுடன் இருவர் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்

இதன்போது பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 04 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு இன்று (10) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment