வருண் தவான் - கீர்த்தி சுரேஷ் நடித்த பேபி ஜான் படத்தின் டிரெய்லர் வெளியானது
சினிமா
இயக்குநர் ஏ. காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்த இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குநர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் தயரித்துள்ளது.
இந்தப் படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பேபி ஜான் படத்தின் 'நைன் மடாக்கா' மற்றும் பிக்லி பாம் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தின் டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. டிரெய்லர் கடைசியில் சல்மான் கானுடன் சண்டையிடும் காட்சி இடம் பெற்றுள்ளது. அவர் எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
























