TamilsGuide

என்னை இழு இழு இழுக்குதடி - காதலிக்க நேரமில்லை பாடலுக்கு Vibe செய்த யோகி பாபு

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படம் காதலிக்க நேரமில்லை. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

இந்த நிலையில், காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடல்- `என்னை இழுக்குதடி' சில வாரங்களுக்கு முன் வெளியானது. ஏ.ஆர். ரகுமான் மற்றும் தீ இணைந்து பாடியுள்ள என்னை இழுக்குதடி பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுவரை இப்பாடல் 10 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்தது.

இந்நிலையில் இப்பாடலிற்கு நடிகர் யோகி பாபு வைப் செய்து நடனமாடியுள்ளார். அதனை படக்குழு பகிர்ந்துள்ளது. இவர் ஆடிய அந்த காணொளி சமூக வகைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

Leave a comment

Comment