வியட்நாமில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பணக்கார பெண்மணிக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வியட்நாமின் பணக்கார நபர்களில் ஒருவரான ட்ரோங் மை லான்(Truong My Lan), ஏப்ரலில் சுமார் 12.3 பில்லியன் டொலர்கள் கையாடல் செய்தது, ஊழல் மற்றும் கடன் வழங்கும் விதிமுறைகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார்.
லானின் வழக்கு வியட்நாம் அரசின் நீடித்த ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படும் நிலையில், இந்த குற்றச்செயலுக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் அக்டோபரில் தனித்தனி பத்திர மோசடி குற்றச்சாட்டுகளுக்காகவும் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, மோசடி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அவர் மேற்கொண்ட தனது மேல்முறையீட்டில் தோல்வியடைந்துள்ளார்.
அத்துடன் இந்த வழக்கில் சலுகை அளிக்க எந்த அடிப்படையும் இல்லை என்றும் தெரிவித்தது.
இருப்பினும், மரண தண்டனையை தவிர்க்க, லான் குறைந்தது அவரால் ஏற்பட்ட 27 பில்லியன் டொலர் சேதத்தில் மூன்றில் இரண்டு பங்கை, அதாவது சுமார் 11 பில்லியன் டொலரை திருப்பிச் செலுத்த வேண்டும்.
இந்தத் தொகையை திரட்ட, அவரது சட்டக் குழு கடன் மற்றும் முதலீடுகளை தீவிரமாகத் தேடி வருகிறது, ஆனால் அவரது சொத்துக்களில் பெரும்பகுதி மாநிலத்தால் தற்போது முடக்கப்பட்டுள்ளது.
மேலும் லானின் ஊழல் வழக்கு ஏராளமான உயர் அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்களின் கைதுக்கு வழிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.