பிலிப்பைன்ஸில் கடல் ஆமை இறைச்சியை உட்கொண்ட 3 பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பிலிப்பைன்ஸின், Maguindanao del Norte மாகாணத்தில் கடல் ஆமை இறைச்சியை உட்கொண்டதிலிருந்து, பல பழங்குடியின மக்கள் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்றவற்றினால் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து சுமார் 32 பேர வரையில் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்ட நிலையில், 31 பேர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது .
அதேவேளை பிலிப்பைன்ஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கடல் ஆமைகளை வேட்டையாடுவது அல்லது உட்கொள்வது சட்டவிரோதமான விடயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.