கனடாவின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளின் அதிகாரத்தை அதிகரிப்பது குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லிபிலான்க் மற்றும் அவரது அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
புதிய கருவிகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எல்லைப் பாதுகாப்பு விவகாரம் காரணமாக அமெரிக்கா கூடுதல் விரகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் இது தொடர்பிலான எச்சரிக்கையை வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.