நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியான திரைப்படம் அமரன்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நிஜ கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் தாறுமாறு வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
அதுமட்டும் இல்லாமல் தமிழில் இந்த வருடம் வெளியான படங்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட படமாக அமரன் அமைந்துள்ளது.
இப்படத்தில் நடித்ததற்காக பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரும் சிவகார்த்திகேயனை பாராட்டி வருகிறார்கள்.
தற்போது பெரிய நடிகர்கள் படங்கள் செய்யும் சாதனையை சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் செய்துள்ளது. அதாவது தமிழகத்தில் மட்டுமே சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் டிக்கெட் ரூ. 1 கோடி விற்றுள்ளது.
2 முன்னணி நடிகர்களை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் இந்த படம் தான் சாதனை செய்துள்ளது.