TamilsGuide

வைரலாகும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்

தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் 'நடிகையர் திலகம்' படத்திற்காக தேசிய விருது பெற்றார். தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் 'தெறி' படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இப்படி பிசியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் விரைவில் கேரளாவை பூர்வீகமாக கொண்ட துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்று தகவல் வெளியானது. 15 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இதனிடையே, கடந்த வாரம் குடும்பத்தினருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறும் போது, இந்தியில் 'பேபி ஜான்' என்ற படத்தில் நடித்து வருகிறேன். அடுத்த மாதம் (டிசம்பர்) எனக்கு திருமணம் நடைபெற உள்ளதால் ஏழுமலையானை தரிசித்தேன். திருமணம் கோவாவில் நடைபெறுகிறது என்றார்.

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் நண்பரின் திருமணத்திற்காக தயாரானபோது எடுத்த புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
 

Leave a comment

Comment