TamilsGuide

ரயில் சேவைகள் தாமதம்

கரையோர மார்க்கம் மற்றும் சிலாபம் மார்க்கமூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அளுத்கமவில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் கரையோரப் பாதையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு ரயில் நிலையத்தில் சமிக்ஞை கோளாறு காரணமாக சிலாபம் மார்க்கமூடான ரயில் சேவைகளும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவைகளை வழமைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.
 

Leave a comment

Comment