நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (03) அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையானதாக உள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வா நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 286.38 ரூபாவாகவும், 294.98 ரூபாவாகவும் உள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 286.39 ரூபாவாகவும், 294.97 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
அதேநேரம், மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளது.