அமெரிக்காவில் இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இவர் 2025 ஜனவரி மாதம் 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
இதற்கிடையே தன்னுடைய கேபினட்டில் இடம் பெறக்கூடிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து வருகிறார். எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோருக்கு முக்கிய பொறுப்பு வழங்கியுள்ளார்.
அண்மையில், காலநிலை தொடர்பாக பணிபுரியும் 4 அரசு ஊழியர்களை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்கிற ஸ்க்ரீன்ஷாட்டை எலான் மஸ்க் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அரசு ஊழியர்களின் பெயர்களும் பதிவுகளும் உள்ளது.
இந்த பதிவு 2.7 கோடி பார்வைகளை எக்ஸ் பக்கத்தில் பெற்றது. இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் மஸ்க் குறிப்பிட்ட 4 அரசு ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.