TamilsGuide

வடக்கு கிழக்கில் மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிப்பு

தாயகத்திற்காக போராடி வீரச்சாவடைந்த உறவுகளை உணர்வெழுச்சியுடன் நினைவுகூறும் வகையில் வடக்கு கிழக்கில் நேற்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது

கொட்டும் கடும் மழைக்கு மத்தியிலும், இயற்கை சீற்றத்தையும் பொருட்படுத்தாது   தமிழர் தாயகப்பகுதியில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், மாவீரர்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு, கண்ணீரால் உறவினர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதேவேளை முதலாவது மாவீரர் சங்கரின் சொந்த வீடான வல்வெட்டித்துறையில்  நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.மாவீரர் பண்டிதரின் தாய் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் ஈகைச்சுடரேற்றி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்திருந்தனர்.

Leave a comment

Comment