TamilsGuide

தெதுரு ஓயா நீர்த்தேக்க வான் கதவுகள் திறப்பு

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், நிக்கவெரட்டிய, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ, பிங்கிரிய, வாரியபொல மற்றும் கொபேகனே ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, மோசமான வானிலை காரணமாக வடமாகாணத்தில் 64,000 ஹெக்டேயர் நெற்செய்கை நாசமாகியுள்ளது.

அதேநேரம், மன்னார் மாவட்டத்தில் 23,000 ஹெக்டேயருக்கும் அதிகமான நெற்செய்கையும் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a comment

Comment