TamilsGuide

நோவா ஸ்கோஷியா தேர்தலில் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி

கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியீட்டியுள்ளது.

இதன்படி கட்சியின் தலைவரும் மாகாண முதல்வருமான டீம் ஹுஸ்டன் இரண்டாம் தடவையாகவும் முதல்வராக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார்.

டீம் ஹுஸ்டன் தனது பதவிக்காலம் முடிவதற்கு ஏழு மாதங்களுக்கு முன்னதாகவே இடைத்தேர்தல் நடத்தியிருந்தார்.

எனினும் இந்த தேர்தலில் டீம் ஹுஸ்டன் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

இன்னமும் தேர்தலின் இறுதி முடிவுகள் முழுமையாக வெளியிடப்படவில்லை.

எவ்வாறெனினும் வாக்கு எண்ணப்பட்டுள்ள நிலைகளில் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலை வகிப்பதாகவும் கட்சி அமோக வெற்றியை பதிவு செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Leave a comment

Comment