ஆன்லைன் அகராதி வலைதளமான டிக்ஷனரி (Dictionary.com) 2024 ஆண்டின் வார்த்தையாக 'demure' (டெமூர்) தேர்வு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில் டெமூர் என்ற வார்த்தை பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க டிரெண்ட் எதுவும் உருவாகவில்லை.
எனினும், ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்த வார்த்தையை 14 மடங்கு அதிகளவு ஆர்வம் இருந்தது. ஆகஸ்ட் மாதத்திற்கு முந்தைய தேதிகளில் இருந்ததை விட டெமூர் வார்த்தைக்கு டிக்ஷனரி தளத்தில் 200 மடங்கு அதிக தேடல்களை பெற்றுள்ளது.
அதிக தேடல் காரணமாக ப்ரைன்ராட், ப்ராட், தீவிர வானிலை, மிட்வெஸ்ட் நைஸ் போன்ற பிரபல வார்த்தைகளை முறியடித்து நியூமெரோ யூனோ (அதாவது மற்றவைகளை விட அதிக பிரபலமானது) என்ற நிலையை எட்டியது.
கடந்த ஆகஸ்ட் மாத துவக்கத்தில் சிகாகோவை சேர்ந்த லெப்ரான் என்ற பெண் சிறு வீடியோவை வெளியிட்டார். வீடியோவில் தனது மேக்அப்-ஐ அவரே ரசித்து வர்ணிக்கும் ஆடியோ இடம்பெற்று இருந்தது. தன்னை வர்ணிக்கும் போது லெப்ரான் மற்ற வார்த்தைகள் இடையே "டெமூர்" என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
இந்த ஆடியோ உலகளவில் வைரல் ஆக, பல்வேறு பிரபலங்களும் டெமூர் வார்த்தையை பயன்படுத்தினர். உலகளவில் வைரலான டெமூர் வார்த்தை இந்த ஆண்டிற்கான வார்த்தையாக தேர்வு செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.