TamilsGuide

விவாகரத்து வழக்கு - ஜெயம் ரவி, ஆர்த்தி சமரச பேச்சு வார்த்தைக்கு நேரில் ஆஜர்

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவியின் மனைவி, "விவாகரத்து செய்யத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்றும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன்'' என்று தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது. ஆனால் கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.

விவாகரத்து வழக்கில் சமரச தீர்வு மையத்தின் மூலமாக பேச இருவருக்கும் குடும்ப நலநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி சமரச பேச்சு வார்த்தைக்கு இன்று நேரில் ஆஜராகினர். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 7ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
 

Leave a comment

Comment