TamilsGuide

பிரதமருக்கும் பல நாடுகளின் தூதுவர்களுக்கிடையில் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு பல நாடுகளின் தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது

அதன்படி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தது

இதில் எகிப்து நாட்டின் தூதுவர், அடெல் இப்ராஹிம்( Adel Ibrahim), ஈரான் தூதுவர், கலாநிதி அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh), ஜப்பான் தூதுவர் ISOMATA Akio மற்றும் இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் (Apostolic Nuncio) அதி வண. பேராயர் பிரையன் உடைக்வே (Monsignor Brian Udaigwe) ஆகியோர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி உட்பட தூதரகங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகள், இலங்கை அரச அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்
 

Leave a comment

Comment