கனடாவின் மாகாணங்களில் ஒன்றான நோவா ஸ்கோஷியாவில் இன்றைய தினம் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
மாகாணத்தில் கடந்த நான்கு வாரங்களாக பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இரண்டாம் தடவை முதல்வர் பதவியை பெறும் நோக்கில் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ரிம் ஹுட்சன் முன்கூட்டியே தேர்தலை அறிவித்திருந்தார்.
எதிர்வரும் 2025ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் திகதி தேர்தல் நடைபெறவிருந்தது.
எனினும் ஏழு மாதங்கள் முன்கூட்டியே மாகாணத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்றைய தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இன்றைய தினம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் மக்கள் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.