TamilsGuide

சீனாவில் எப்படி உணவு டெலிவரி செய்யப்படுகிறது

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஜோஷி. இன்ஸ்டாகிராம் பிரபலமான இவர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சீனாவுக்கு சுற்றுலா சென்ற இவர் அங்குள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது தனக்கு வேண்டிய உணவை தொலைபேசி அழைப்பு மூலமாக நிர்வாகத்துக்கு தெரிவித்தார்.

இதனையடுத்து சிறிது நேரத்தில் அவருடைய அறைக்கு தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. அதில் 'உங்களுடைய அறைக்கு நீங்கள் ஆா்டர் செய்த உணவுப்பொருட்கள் வந்துள்ளன' என்று கூறப்பட்டது.

அறையின் கதவுக்கு பின்னால் அவருக்கு ஆச்சரியம் காத்திருந்துள்ளது. கதவை திறந்து பார்த்தால் அட்டைபெட்டி வடிவில் இடுப்பளவு உயரம் கொண்ட ரோபோ ஒன்று நின்று கொண்டு உணவு டெலிவரி செய்தது.

'சீனாவில் எப்படி உணவு டெலிவரி செய்யப்படுகிறது' என்ற தலைப்புடன் சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த வீடியோ 1½ லட்சம் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.
 

Leave a comment

Comment