TamilsGuide

இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட லிரிக் வீடியோவாக கிஸிக் பாடல் இடம்பெற்றது

சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. புஷ்பா 2 திரைப்படத்தின் ஸ்ரீலீலா கிஸிக் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். சமீபத்தில் படத்தின் தமிழ் ப்ரோமோஷனல் நிகழ்ச்சி சென்னையில் மாபெரும் அளவில் நடைப்பெற்றது.

கிஸிக் பாடல் இணையத்தில் மிகப்பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இதுவரை இந்தியாவில் வெளியான லிரிக் வீடியோ பாடல்களில் 24 மணி நேரத்திற்குள் அதிகம் பார்வைகளை பெற்ற சாதனை இப்பாடல் பெற்றுள்ளது. வெளியான 24 மணி நேரத்தில் 42 மில்லியன் பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளது.

இப்பாடலின் வரிகளை விவேகா எழுதியுள்ளார். பாடலை சுப்லாஷினி பாடியுள்ளார். பாடலின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

Leave a comment

Comment