நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தை தயாரித்து வரும் டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஆகாஷ் பாஸ்கரின் திருமணம் அண்மையில் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர்களான தனுஷ், சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், அனிருத் மற்றும் பல திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நயன்தாரா மற்றும் தனுஷ் விழாவில் கலந்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. இந்நிலையில் அண்மையில் நடந்த திருமண பார்ட்டியில் நடிகர் தனுஷ் மற்றும் சிம்பு கலந்துக் கொண்டனர். இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் மிகப் பெரியளவில் இணையத்தில் வைரலானது.
திருமண பார்ட்டியில் அட்லீ, பிரியா அட்லீ, தனுஷ், சிவகார்த்திகேயன், ஹரிஷ் கல்யாண் அனவரும் இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் தற்பொழுது வைராகி வருகிறது. ஜலபுலஜங், கோல்டன் ஸ்பேரோ, வாட் ந் கருவாட் போன்ற பாடலுக்கு நடனமாடினர்.