ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது முறைகேடு புகார் எழுந்தது. இதையடுத்து, கைதில் இருந்து தப்பிப்பதற்காக 2010 ஆம் ஆண்டு வெளிநாடு தப்பிச்சென்றார். தற்போது லலித் மோடி, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள லலித் மோடி கூறியிருப்பதாவது:-
"என்மீது எந்த கோர்ட்டிலும் வழக்குகள் இல்லை. சட்டப் பிரச்சனையும் இல்லை. அப்படி இருந்தால், தயவுசெய்து அதை சமர்ப்பிக்கவும். இருப்பினும், நான் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டேன். காரணம், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் 'மேட்ச் பிக்ஸ்' செய்யச் சொல்லி நெருக்கடி கொடுத்தார். விளையாட்டில் நேர்மை மிகவும் முக்கியம் என்பதால் மறுத்தேன். இதனால் எனக்கு பல வழிகளில் கொலை மிரட்டல்கள் வந்தது" எனத் தெரிவித்துள்ளார்.