பதுளை – பிபில வீதியின் 143 ஆவது, 144 ஆவது கிலோ மீற்றர் கட்டைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அதன்படி, இன்று (25) காலை 6.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை குறித்த வீதி போக்குவரத்துக்காக திறக்கப்படும் எனவும், மாலை 6.00 மணி முதல் நாளை (26) காலை 6.00 மணி வரை குறித்த வீதி மூடப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 18 ஆம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் பதுளை செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ஆம் கட்டை பகுதியில் பாரிய கற்பாறைகள் சரிந்து வீதியில் விழுந்தமையினால் கடந்த 6 நாட்களாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.
பின்னர் நேற்று (24) அந்த இடத்தை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் பார்வையிட்டார்.