TamilsGuide

இந்த வாரம் மீண்டும் கூடும் தேர்தல் ஆணைக்குழு

எதிர்வரும் வியாழக்கிழமை (28) காலை 10.00 மணிக்கு தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடவுள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் ஆணைக்குழு கூடுவது இதுவே முதல் முறை.

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் மற்றும் ஆயர்த்தங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளன.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அண்மையில் உறுதிப்படுத்தினார்.

அத்துடன், உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக, இத்தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனமும் செலுத்தப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு இதுவரை பணம் ஒதுக்கப்படவில்லை எனவும், இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
 

Leave a comment

Comment