TamilsGuide

எல்லாமே எதிர்பாராத முடிவாக உள்ளன- ஏ.ஆர்.ரகுமான் உருக்கம்

தமிழ் சினிமாவில் தனுஷ், ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ் என நட்சத்திரங்களின் விவாகரத்து வரிசையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

எப்போதுமே சினிமா பிரபலங்கள் விவாகரத்து முடிவில் இருக்கும் சமயம் சண்டை, சச்சரவு, தகராறு, மோதல் என அரசல் புரசலாக ஏதாவது ஒரு தகவல் வெளியாகும். ஆனால் ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு இடையே இதுவரை எந்த சண்டையும், வாக்குவாதமும் ஏற்பட்டதாக யாருமே அறியாத நிலையில், திடீரென சாய்ரா பானுவின் இந்த பிரிவு அறிவிப்பு நேற்று இந்திய சினிமாவிலேயே பரபரப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முறிந்துள்ளது.

இந்த நிலையில், தன்னை பிரிவதாக சாய்ரா பானு அறிவித்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரகுமான் எக்ஸ் தள பக்கத்தில், 30ம் ஆண்டு திருமண பந்தத்தை எட்டுவோம் என நம்பி இருந்ததாகவும், ஆனால், அனைத்தும் எதிர்பாராத முடிவுகளாகி விட்டது. உடைந்த இதயங்களின் எடையால் இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும். எனினும் இச்சிதறலில் உடைந்த துண்டுகள் தங்களுடைய இடத்தை மீண்டும் சேராமல் போனாலும், அர்த்தத்தை தேடி வருகிறோம். எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிப்பதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment