TamilsGuide

நெகட்டிவ் விமர்சனங்கள் எதிரொலி - கங்குவா படத்தில் 12 நிமிட காட்சிகள் அகற்றம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் நவ.14 அன்று திரையரங்குகளில் வெளியானது. 3டி தொழில்நுட்பத்தில் பான் இந்தியா முறையில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் இரைச்சல், அதீத சத்தம் எரிச்சலூட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தன.

கங்குவா திரைப்படத்திற்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களால் மொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதற்கிடையே நடிகை ஜோதிகா படம் குறித்து விளக்கமான பதிவை வெளியிட்டு நெகடிங் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இப்பதிவு வைரலானதுடன், கவனத்தையும் பெற்றது.

அதேநேரம், ரசிகர்கள் தரப்பிலிருந்து படத்தின் வசனம் மற்றும் பின்னணி இசை இரைச்சலாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நெகட்டிவ் விமர்சனங்கள் எதிரொலியாக கங்குவா படத்தில் 12 நிமிட காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதில் அதிகமாக விமர்சிக்கப்பட்ட படத்தின் ஆரம்பக் காட்சிகளே பெரும்பாலும் வெட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் நாளில் கடுமையான எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்த கங்குவா, தற்போது ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இன்னொருபுறம், நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி, 'கங்குவா' படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.127 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Leave a comment

Comment