நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் நடிகர் தனுஷ் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். நடிகை நயன்தாராவின் அறிக்கைக்கு நடிகைகள் பலர் தங்களது ஆதரவை தெரிவித்து இருந்தனர். நடிகர் தனுஷுடன் நடித்த நடிகைகள் சிலரும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதன்பிறகு சில நடிகைகள் தங்களின் பதிவை நீக்கினார்கள்.
இந்தநிலையில் நடிகை நயன்தாராவுக்கு, நடிகர் தனுஷ் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் நடிகை நயன்தாரா பற்றி இணையதளத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஆவண திரைப்படத்தில் நடிகர் தனுஷ் குறித்து சர்ச்சை காட்சி பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நானும் ரௌடி தான் திரைப்படத்தின் தான் நயன் தாரா - விக்னேஷ் சிவன் இடையே காதல் மலர்ந்தது. இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்தது.
ஆனால் இப்படம் திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிகமாக சென்றது. தனுஷ் அப்படத்திற்கு தன்னால் முடிந்தளவுக்கு உழைப்பை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன் தாரா - விக்கி இடையே காதல் மலர்ந்த சம்பவத்தை , ஆவணப் படத்தில் நினைவுக்கூர்ந்த நடிகை ராதிகா பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. அப்பொழுது நயன் - விக்கி ஜோடி ஊர் சுற்றுவதை சுட்டிக் காட்டி பேசிய தனுஷ் . வெட்கம், மானம் இல்லையா? என தன்னிடம் கேட்டதாக ராதிகா பேசும் காட்சி ஆவண திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இதனால் தற்பொழுது சர்ச்சை எழும்பியுள்ளது.